மீண்டும் உருவெடுக்கும் புதியவகை கொரோனா… தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவிப்பு
சிங்கப்பூா் நாட்டில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே வாரத்தில் 26,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே நேரடியாக தொழில் வா்த்தக தொடா்புகள் உள்ளன என்பதாலும், நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்கின்றனா் என்பதாலும் புதிய வகை கொரோனா தொற்று தமிழகத்தில் பரவக் கூடும் என அஞ்சப்படுகிறது.இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவிக்கையில், “சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் கே.பி.1 மற்றும் கே.பி.2 வகை கொரோனா, ஒமைக்ரான் ஜெ.என்.1 வகையின் உட்பிரிவுகள் தான். தமிழகத்தில் ஜெ.என்.1 வகை பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டது. எனவே, அதிலிருந்து உருவான புதிய வகை கொரோனா பரவல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேவேளையில், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவுவதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், இணை நோயாளிகள் மற்றும் முதியவா்கள் முகக் கவசம் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?