மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிக் கொன்ற தந்தை

May 30, 2024 - 17:28
 0  7
மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிக் கொன்ற தந்தை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சின்ன வீரமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் மோகன் (45). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதே போன்று சம்பவத்தன்று மோகன் மது அருந்திவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுத்து தீ வைத்து எரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தந்தை முத்துவேல் மகனின் கழுத்துப் பகுதியில் அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் மோகன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முத்துவேலிடம் ஆவுடையார்கோவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் தகறாறில் ஈடுபட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow