இலங்கைக்கு கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை காக்கும் சிறுகுரு தொழிலான பீடி சுற்றும் தொழில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஓடக்கரை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.கடத்தலில் ஈடுபட்டதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி துரை என்பவரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?