30 கிலோ கஞ்சாவை பதுக்கிய வாலிபர் கைது

Apr 22, 2024 - 15:58
 0  22
30 கிலோ கஞ்சாவை பதுக்கிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே குடியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் கெலமங்கலம் போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டதை அடுத்து முருகேசன் என்பவர் வீட்டில் 30 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து முருகேசனை கைது செய்தனர்.மேலும் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்து தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow