ஆசிரியைகழுத்தில் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Apr 23, 2024 - 09:24
 0  8
ஆசிரியைகழுத்தில் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46 இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர் இதுகுறித்து தீபாலட்சுமி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவர் போலீசாரிடம் கூறியதாவது என்கிட்ட துப்பாக்கி இருந்திருந்தால் கொள்ளையர்களை தைரியமாக சுட்டு பிடித்து இருப்பேன் பள்ளி மாணவர்களுக்கு தைரியத்தை கற்றுக் கொடுத்திருப்பேன் என காவல் நிலையத்தில் ஆசிரியை ஆவேசம்.இது குறித்து வழக்கு பதிவு செய்து திருமுல்லைவாயில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow