சிறுமியிடம் செல்போனை பறித்த இளைஞர்கள் கைது

Jun 6, 2024 - 16:32
 0  9
சிறுமியிடம் செல்போனை பறித்த இளைஞர்கள் கைது

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரை தினமும் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் இருந்து தனியார் பஸ் வந்து ஏற்றிச் செல்கிறது. கடந்த மாதம் 11ம் தேதி அதிகாலையில் பஸ்சுக்காக காத்திருந்தபோது செல்போனில் பேசியுள்ளார். அப்போது ஹெல்மெட் பைக்கில் வந்த 2 பேர், சிறுமியிடம் இருந்து செல்போனை பறித்து தப்பினர். அப்போது சிறுமி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டபடியே பைக் பின்னாடி ஓடியபோது பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை விரட்டிச்சென்ற போது தப்பிவிட்டனர்.இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான பைக் நம்பரை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று அரும்பாக்கம் மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்கு முரணான பேசினர். இதையடுத்து அவர்கள் வந்தது திருட்டு பைக்கா என்று நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது இளம்பெண்ணிடம் செல்போன் பறிக்கும்போது பயன்படுத்திய பைக் என்பது தெரிந்தது.இதையடுத்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் ராமு(எ)ராமு பிரசாத்(24), இவரது தம்பி கார்த்திக்(22) என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், பைக்கை பறிமுதல் செய்து செய்தனர். இதன்பின்னர் 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow