சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி (48), இவர், கடந்த வாரம் பல்லாவரம் பம்மல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இந்நிலையில், செயினை பறிகொடுத்த பெண், அவர்களை விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார், பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது புரசைவாக்கத்தில் வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர்.இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் முகமது அலி, சதீஷ்குமார் என்பதும், கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. சொகுசாக செலவு செய்ய செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.இருவரும் சேர்ந்து சேலையூர் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?