தந்தை வாங்கிய கடனுக்கு மகளை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்; 5 பேர் கைது

Jun 1, 2024 - 08:43
 0  7
தந்தை வாங்கிய கடனுக்கு மகளை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்; 5 பேர் கைது

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணி (40) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் மற்றும் சுரேஷிடம் ரூ.1.50 லட்சம் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தேவைக்காக கடன் வாங்கியுள்ளார். விவசாயி திரும்ப கொடுக்காததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விவசாயியின் 19 வயது மகள் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாக வில்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர், தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மணி மற்றும் அவரது நண்பர்களான பழனி (28). நவநீத் (28), சுரேந்தர் (35), ஹரி (20) ஆகியோர் அந்த இளம்பெண்ணை காரில் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை காரில் வைத்தே பழனி, நவநீத் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதை மணி செல்போனில் படம் பிடித்துள்ளார். நடந்த விபரங்களை வெளியே கூறினால், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை காரில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனி மாவட்ட எஸ்.பி சிவபிரசாத்திடம் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow