22 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

May 20, 2024 - 18:35
 0  14
22 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்தவர் 58 வயதான ஆசிரியர் திருமாறன். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஊர் திரும்பிய அவர் வீட்டை திறக்க முற்பட்டபோது காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த திருமாறன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த மரத்தால் ஆன பீரோ மற்றும் இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கலைந்து, சிதறி கிடந்ததுள்ளது.மேலும் பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து இது குறித்த சீர்காழி காவல் நிலையத்தில் திருமாறன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற இடத்தில் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மேலும் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow