அனுமதியின்றி அரசால் தடை செய்யப்பட்ட லாட்டாரி விற்பனை; வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் ராஜூ கண்ணன் (39).இவர் நீண்ட நாட்களாக இனுங்கூர் கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குளித்தலை போலீசார் லாட்டரி விற்பனையில் எடுப்பட்ட ராஜூ கண்ணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
What's Your Reaction?






