திண்டுக்கல் அருகே கல்லூரி மனைவியை கடித்து குதறிய தெரு நாய்களால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஹேமா.இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.ஹேமா காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து ஹேமாவை கடித்து குதறிவிட்டன. மாணவி கூச்சலிட்டதை பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மாணவியை நாய்களிடம் இருந்து மீட்டனர். நாய்கள் கடித்ததில் கை மற்றும் காலில் ஹேமாவிற்கு காயம்பட்டது. உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை அனுமதித்தனர்.கல்லூரிக்கு சென்ற மாணவியை தெருநாய்கள் கடித்த சம்பவம் அருகில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?