காதலிப்பதாகக் கூறி பழகி பெண்ணின் புகைப்படங்களையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய வாலிபர் கைது
நாகர்கோவில் மாவட்டம் வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார்.இவருக்கு இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது ஸ்ரீதர்ஷன், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளார்.இதற்கிடையே ஸ்ரீதர்ஷனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்ஷன், அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளார். இதே போல மற்றொரு இளம் பெண்ணிடமும் ஸ்ரீதர்ஷன் காதலிப்பதாகக் கூறி பழகியதோடு அந்தப் பெண்ணின் புகைப்படங்களையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்துள்ளார்.இதையடுத்து, இரண்டு கல்லூரி மாணவிகளும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?