அடிப்படை வசதிகள் வேண்டி பல ஆண்டுகள் போராடி வரும் கிராம மக்கள்;அரசு நடவடிக்கை எடுக்குமா...?
1. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி மறுக்கும் அவலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கச்சை கட்டி கிராமம் SK தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஏதேனும் அடிப்படை வசதி தேவையெனில் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்து அதன் அடிப்படையில் தீர்வு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கழிவுநீர் கால்வாய் வசதி,தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கிராம சபை கூட்டம் நடத்துமாறு பலமுறை வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராம சபை கூட்டம் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால் இக்கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளோ, நலத்திட்ட உதவிகளோ செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் அரசு முன்வந்து கிராம சபை கூட்டம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?