மனித உறுப்புகள் விற்பனை? அடுத்தடுத்து வெளியே வரும் காப்பகத்தின் மர்மங்கள்

Jul 13, 2024 - 18:44
 0  16
மனித உறுப்புகள் விற்பனை? அடுத்தடுத்து வெளியே வரும் காப்பகத்தின் மர்மங்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் என்பவர் லவ்ஷேர் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார்.இந்த அறக்கட்டளை 1999 முதல் இயங்கி வருகிறது.இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அப்போதிருந்து, அகஸ்டின் மனநல காப்பகமாக அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டனர். 200 பேரை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மீதமுள்ள 300க்கும் மேற்பட்டோர் தங்க இடமின்றி தவிக்கின்றனர்.இதனால் அங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 9ம் தேதி காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 13 மனநோயாளிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் கோவை மற்றும் ஊட்டி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த காப்பகத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அவர்களது உடல்கள் யாருக்கும் தெரியாமல் காப்புக்காட்டை ஒட்டிய சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, நெலாக்கோட்டை காவல் நிலைய போலீஸார், காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, காப்பக மேலாளர் எலிசபெத் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அகஸ்டின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காப்பகத்தில் இருந்த 16 வயது சிறுவன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அகஸ்டின் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பகத்தில் பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இறந்தவர்களின் உடல் உறுப்புகள் ஏதேனும் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின் சமீபத்தில் ரூ.2.43 கோடி செலவில் புதர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow