காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் தீ விபத்து;பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Jul 13, 2024 - 18:50
 0  5
காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் தீ விபத்து;பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது.மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் இயங்கி வரும் இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இருவரும் உடல் உறுப்புகள் சிதறி உயிரிழந்தனர். சரோஜா, சங்கரவேல் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். சரோஜா நேற்று இரவும், சங்கரவேல் இன்று அதிகாலையிலும் இறந்தனர். இதன் காரணமாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow