ரூ. 9.23 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

Sep 25, 2024 - 16:44
 0  5
ரூ. 9.23 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர்மலை வழியாக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு குட்கா கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது.உடனே தனிப்படை சிறப்பு எஸ்ஐ. முருகன், தலைமையிலான போலீசார் பர்கூர் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சர்க்கரை மூட்டைகளுக்கு அடியில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக லாரி மற்றும் அதில் இருந்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

இதில், குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (31), அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் நாத் (31) என தெரிய வந்தது. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 129 மூட்டை குட்கா பொருட்களையும், ரூ.8,400 பணம், கடத்த பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow