கூலிதொழிலாளியிடம் வாரிசு சான்றுக்கு 1000 லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் நாச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது (62) இவர் தச்சு வேலை செய்து வருகிறார்.இவர் தந்தை ஆறுமுகம் 1996-ஆம் ஆண்டு இறந்துள்ளார். இதற்கு இறப்பு சான்றிதழ் மற்றும் பெற ஆறுமுகம் வாரிசு சான்று பெறவில்லையாம், இந்த நிலையில் ஆறுமுகம் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை பழனிச்சாமி மகன்கள் இருவருக்கு பிரித்து எழுது வாரிசு சான்று தேவைப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் வாரிசு சான்றுக்கு பழனிச்சாமி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை அந்த கிராம நிர்வாக அதிகாரி அனுமதி செய்து இறையூர் வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தை இறையூர் வருவாய் ஆய்வாளர் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளார்.அதனை தொடர்ந்து பழனிச்சாமி கடந்த மே மாதம் எட்டாம் தேதி மீண்டும் விண்ணப்பித்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாரதியை நேரில் பார்த்து வாரிசு சான்று பெற பரிந்துரை செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு வருவாய் ஆய்வாளர் பாரதி பணம் கொடுத்தால் தான் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வேன் எனக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட பழனிச்சாமி நான் கூலி தொழில் செய்து வருகிறேன், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கு உதவி செய்யும்போது எனக் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த மாதம் 30-ஆம் தேதி வருவாய் ஆய்வாளர் பாரதி மேல் நாச்சிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி வீட்டுக்கு விசாரணைக்கு சென்றார். அப்போது பணம் கேட்டு விட்டு வந்துள்ளார். மேலும் பணம் கொடுக்க முடியாத நிலையில் இருந்த பழனிச்சாமி இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் நேற்று புகார் செய்தார்.இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில், துணை ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்ட காவல்துறையினர் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை பழனிச்சாமி இடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்ற பழனிச்சாமி பணத்தை வருவாய் ஆய்வாளர் பாரதியும் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாரதியை சுற்றி வளைத்து ரசாயம் தடவிய நோட்டுகளுடன் கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர் அவரை அங்கு இருந்து செங்கம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் செங்கம் வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?