சிறுமிக்கு தனி பூஜை செய்ய வேண்டும் என எல்லை மீறிய பூசாரி: போகோவில் கைது

த
ர்மபுரி அருகே 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தண்டபாணி (32) என்ற கோயில் பூசாரி, அவளை குணப்படுத்துவதற்காக மாந்தரீகம் செய்வதாகக் கூறினார்.
இந்த நிலையில், தனது பெற்றோருடன் சென்ற சிறுமியை தனியாக பூஜை செய்ய வேண்டும் என்று கூறிய பூசாரி, அவரது பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அலறி அடித்து வெளியே ஓடிச் சென்று நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து, பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பூசாரி தண்டபாணியை கைது செய்தனர்.
What's Your Reaction?






