தமிழ் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் +1 மாணவி தற்கொலை

May 16, 2024 - 06:34
 0  9
தமிழ் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் +1 மாணவி தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் காரை அடுத்த புளியங்கண்ணு நடுத் தெரு பகுதியை சேர்ந்த மகேந்திரன்-ராஜேஸ்வரி தம்பதியர். இவர்களது இரண்டாவது மகள் யமுனா வயது (16) புளியங்கண்ணு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வெளியான 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow