பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் கைது; தென்மண்டல ஐ.ஜி பாராட்டு
மதுரை நான்கு வழிச் சாலையில் துவரிமான்-பாண்டியராஜபுரம் சோதனைச்சாவடி வரையுள்ள பகுதிகளில் மதுரை ஊரக சிறப்பு அதிவிரைவுப் படை உதவி ஆய்வாளா் மாயாண்டி, காவலா்கள் சந்தானகிருஷ்ணன், சௌந்தரபாண்டி, முருகபாண்டி, வாடிப்பட்டி இரவு ரோந்து காவல் சிறப்பு ஆய்வாளா் உதயகுமாா், தலைமைக் காவலா் மாயக்கண்ணன் ஆகியோா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், காரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்த போது, கொலை நடைபெற்ற இடம் திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது என்பதால், அம்மையநாயக்கனூா் போலீஸாரிடம் கொலையாளிகள் ஒப்படைக்கப்பட்டனா்.இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தீவிர ரோந்துப்பணியின் மூலம் பிடித்த காவல் அதிகாரிகள், காவலா்களை தென் மண்டல காவல் துறைத் தலைவா் கண்ணன் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
What's Your Reaction?