பென்னாகரம் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அரசுப்பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி சசிகலா வயது 32. விஜய் பிரைமரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு திருமணமாகி மோனிதரன், பூர்ணிஷா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இவருக்கும் எதிர் வீடான அங்கப்பனின் மனைவி ரேகா என்பவருக்கும் நேற்று காலை 7.15 மணியளவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறு மோதலாக மாறிய நிலையில் ரேகாவின் உறவினர்கள் சசிகலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா விரக்தியில் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுரேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






