கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு; இரு மகன்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்த தாய்

Sep 22, 2024 - 02:45
 0  6
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு; இரு மகன்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்த தாய்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுக்கம்பட்டியில் மகன்களுடன் தாய் குதித்த கிணற்றை சுற்றி கிராம மக்கள் திரண்டனர். இதில் லட்சுமியும், அவரது இளைய மகன் நிஷாந்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், கிணற்றில் தொங்கிய கயிற்றை தர்ஷன் மட்டும் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். சுமார் 2 மணி நேரம் சிறுவன் அலறி துடித்ததால் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தர்ஷன் கயிறு பிடித்து தொங்கியது தெரியவந்தது. அதன்பின், கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்டு இனுங்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிறுவன் தர்ஷன் அளித்த தகவலின் பேரில், லட்சுமி, நிஷாந்த் இருவரும் கிணற்றில் மூழ்கியதை அறிந்த அக்கம் பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் சுமார் 2 மணி நேரம் தேடி லட்சுமி, நிஷாந்த் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுக்கம்பட்டியில் கிணற்றில் இருந்து சிறுவன் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப சண்டையின் போது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow