தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவங்கி மனுக்களை பெற்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப்பகுதிகளுக்கும்விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில் 2,500 முகாம்களின் மூலம் 15 அரசுத் துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறைஅமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் திரு. த. மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






