கண்டுகொள்ளுமா...? தமிழக அரசு;பேருந்து நிறுத்தத்தில் ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி

May 25, 2024 - 05:02
 0  26
கண்டுகொள்ளுமா...? தமிழக அரசு;பேருந்து நிறுத்தத்தில் ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி

தருமபுரி மாவட்டம் நாகனூர் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்கூடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இந்த நிழற்கூடத்தை வசிப்பிடமாக கொண்ட மூதாட்டி ஒருவர் கடந்த 4 மாதங்களாக நடக்க முடியாமல், உண்ண உணவு இல்லாமல், உடை கூட மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்தார்.அதனால் அவரைப் பிரிந்து தன் இரு மகன்களையும் வளர்த்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். வேலைக்குச் சென்று சம்பாதிப்பது வரை அவரைத் தங்களோடு வைத்திருந்த மகன்கள், பின்னர் அவரை விரட்டியடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மற்றும் பெங்களூருவில் உள்ள தனது மகன்களை மூதாட்டி பார்க்க சென்றுள்ளார். ஆனால் இருவரும் அவரை சேர்த்து கொள்ளாமல் ஊருக்கு திருப்பி அனுப்பினார்கள். அதன்பின், ஒருவரின் உதவியுடன், பென்னாகரம் அருகே உள்ள நாகனூருக்கு வந்து, காப்பகத்தில் தஞ்சமடைந்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, வலது கை மற்றும் வலது காலை இழந்தார். இப்போது சாலையோரக் நிழற்கூடத்தில் வசிக்கும் மூதாட்டி, அதே நிழற்குடையில் தான் சாப்பிட்டு, தூங்கி, மலம் கழிக்கிறார். பஸ் ஸ்டாண்டிற்கு வரும் சாமானியர்கள் கொடுக்கும் மிச்ச உணவையும் சாப்பிட்டு, வாழ்க்கையை நகர்த்துகிறார். ஆதரவின்றி நிழற்கூடத்தில் தவிக்கும் மூதாட்டியை நல்ல முறையில் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow