இளம்பெண் ஆதரவின்றி உயிரிழப்பு;நல்லடக்கம் செய்த திண்டுக்கல் தாலுகா காவல்துறை
திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா (வயது48). இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மதுரை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இறந்த லதாவை பற்றி எந்த விவரமும் தெரியாததால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவலர்கள் மதுரையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இறந்த லதாவின் உடலை நல்லடக்கம் செய்தனர். இந்நிகழ்வு குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
What's Your Reaction?