பெண் சடலத்தை புதைக்க இடம் தேடி பறந்த கார்; போலீசாரிடம் சிக்கியது எப்படி திக் திக் நிமிடங்கள்

May 11, 2024 - 21:33
 0  8
பெண் சடலத்தை புதைக்க இடம் தேடி பறந்த கார்; போலீசாரிடம் சிக்கியது எப்படி திக் திக் நிமிடங்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த அருண் ஸ்டாலின் விஜய் (32), இவரது மனைவி பிரின்சி (27) இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார்.இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த திவாகர் (24) என்பவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பல்லடத்தில் பணிபுரிந்து வந்த பிரின்சிக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் திவாகருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த சம்பவம் திவாகரின் மனைவிக்கு தெரியவரவே கடந்த ஒரு மாதமாக பிரின்சியுடனான தொடர்பை திவாகர் துண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து திவாகரிடம் பணம், நகை கேட்டு பிரின்சி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திவாகர், பிரின்சியை கொல்ல முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த உறவினர் இந்திரகுமாரிடம் (31) பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வருமாறு கூறினார்.பல்லடத்திற்கு காரில் வந்த உறவினர் இந்திரகுமார் மற்றும் திவாகர் ஆகியோர், பல்லடத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரின்சியை அழைத்தனர். அங்கு வந்த பிரின்சியிடம் காரில் உனக்கான பரிசுப் பொருட்கள் இருப்பதாகவும், நீ கண்ணை மூடிக்கொள், அந்த பொருளை சஸ்பென்ஸாக தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். மகிழ்ச்சியில் அவனிடமிருந்து பரிசைப் பெற பிரின்சி கண்மூடிய நிலையில் இருந்தபோது காரில் மறைத்து வைத்திருந்த கயிற்றால் பிரின்சியை கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். பிரின்சியின் உடலை காரில் வைத்து பல்லடத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு பிரின்சியின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழிச்சாலை வழியாக மதுரை நோக்கி சென்றபோது, கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளப்பட்டி பிரிவில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்டதில், அதில் பெண் சடலம் இருப்பதும் பின் தொடர்ந்து திவாகர் இருசக்கர வந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரின்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், திவாகர் மற்றும் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் பெண்ணின் சடலத்தை ஏற்றிச் சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow