மயிலாடுதுறையில் 12 கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு எளிதாக கிடைப்பதாக மீனவ பெண்கள் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதன்படி, நேற்று நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சிகரெட் விற்பனைக்காக விதிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
What's Your Reaction?