கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

May 2, 2024 - 09:56
 0  10
கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது நெசவாளர் காலனி அருகே பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது.இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா,மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மகள் நித்திஷா படுகாயமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நித்திஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த 4 நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பவானிசாகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow