கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

ஈரோடு:கோபி அருகே சிறுவலுாரை சேர்ந்தவர் ஸ்டெல்லா, 31; கோபியை சுற்றியுள்ள சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்கிறார்.திங்களூர் சந்தையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் செய்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி, 500 ரூபாயை கொடுத்து, நுாறு ரூபாய்க்கு காய்கறி வாங்கி கொண்டு, 400 ரூபாயை பெற்று சென்றார். அதே நபர் அங்கு பழக்கடை வைத்தி-ருந்த, ராணியிடம், 500 ரூபாயை கொடுத்து, நுாறு ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு, 400 ரூபாயை பெற்று சென்றார். ஆசாமி கொடுத்த ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருந்ததால், இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.இதனால் சந்தேகமடைந்த ஸ்டெல்லா, ரூபாய் நோட்டை தந்த நபரை பின் தொடர்ந்து சென்றார். அப்போது அந்த நபர், சந்தை கடை அருகே நிறுத்தியிருந்த காரில் ஏறி சென்றார்.காரில் இரு பெண்கள் உட்பட மூவர் இருந்துள்ளனர். அங்கிருந்த ஒரு ஆட்-டோக்காரரிடம் ஸ்டெல்லா பணத்தை கொடுத்து பார்த்தபோது, கள்ளநோட்டு என தெரிந்தது. இதுகுறித்து அவர் புகாரின்படி, திங்-களூர் போலீசார் வழக்குப்பதிவு மர்ம ஆசாமியை தேடினர். கோபி சாலை ஆவரங்காடு என்ற இடத்தில், ஒரு காரில் சோதனை செய்தபோது, அந்த நால்வரும் திங்களூர் சந்தையில் கள்ள நோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனத்தெரிய-வந்தது. விசாரணையில் சத்தியை சேர்ந்த ஜெயராஜ், 40, ஜெயபால், 75, சரசு, 70, மேரி, 42, என தெரிந்தது. இதில் ஜெயராஜ், யூ-டியூப்பை பார்த்து, கலர் ஜெராக்ஸ் மெஷினில், ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து, மற்ற மூவருடன் சேர்ந்து, சந்தைகளில் கள்ள நோட்டை புழக்கத்தில் மாற்றி இருப்-பது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்து, 2.85 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு, இரு கலர் ஜெராக்ஸ் மெஷினை நேற்று பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






