2 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது

May 15, 2024 - 21:12
May 15, 2024 - 21:24
 0  7
2 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டிப்பாளையம் என்ற பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது, சுமார் 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஆஷ்மா கா துன் (40), ஜஹீரா கா துன்(29), இத்ரிஷ் அலி(29), குதிஜா கா துன்(37) , அலி ஹீசைன் (48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து உயர் ரக போதை பொருட்களை கடத்தி வந்து, தொண்டாமுத்தூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல் துறை‌யின‌ர் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow