சட்டைக்குள்ள 14 லட்சத்தை பதுக்கிய மொட்டை; மொத்தமாக கைப்பற்றிய போலீசார்

Apr 23, 2024 - 02:44
 0  22
சட்டைக்குள்ள 14 லட்சத்தை பதுக்கிய மொட்டை; மொத்தமாக கைப்பற்றிய போலீசார்

கோவை: கேரளா மாநிலத்தில் வரும் 26ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழக,கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.செக்போஸ்டில் இருந்த கேரளா போலீசார் கோவையிலிருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பேருந்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ (40) என்ற பயணி உடுத்தி இருந்த ஆடையில் பல்வேறு இடங்களில் ரகசிய அறைகள் அமைத்து அதற்குள் பணத்தை கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் பணத்தை எடுக்க கூறியபோது பல இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக அவர் பணத்தை வெளியே எடுத்ததை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.இதனை அடுத்து பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்த ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow