ராணிப்பேட்டையில் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்;கடை உரிமையாளர் கைது

May 17, 2024 - 06:03
 0  4
ராணிப்பேட்டையில் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்;கடை உரிமையாளர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து இதனை தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் படி அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பசலைராஜ், தினேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அரக்கோணம் - காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டுருக்கும் போது வெங்கடேசபுரம் அகன் நகர் பகுதியில் உள்ள கடையின் அருகே இருந்த நபர் போலிசாரை பார்த்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதனை அடுத்து நாராயணன் என்பவரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 337kg எடைக் கொண்ட ரூபாய்.3,00,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு நாராயணன் அலைத்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow