தப்பியோடிய கைதி 2 மணி நேரத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (27). இவரை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பள்ளத்தூர் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக காரைக்குடி, பள்ளத்தூர் போலீசார் நேற்று பிற்பகல் 1 மணியளவில் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றபோது கீழாநிலைக்கோட்டை பகுதியில் வாகனத்தில் இருந்து சக்திவேல் குதித்து தப்பி ஓடினார். சுமார் இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள புதர் செடிகளில் மறைந்திருந்த சக்திவேலை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
What's Your Reaction?






