முதல்வர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு
கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், மோப்ப நாய் பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு படைப் பிரிவினர் பாதுகாப்புப் பணிகளில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?