பெண்களின் ஆபாச வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது;சைபர் கிரைம் போலீசார் அதிரடி

விருதுநகரை சேர்ந்த துர்க்கைராஜ் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண், அவரது யூடியூப் சேனல் மூலம் பேசி பழகியுள்ளார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பெண் ஏற்கனவே பேசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார்.தவறான தொழில் செய்பவர் என்றும் நேரலையாக பலமுறை பேசியுள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் அவர், 20க்கும் மேற்பட்ட பெண்களை இழிவுபடுத்தி பேசி பதிவேற்றம் செய்ததும், ஆண்களையும் ஆபாச வார்த்தையால் திட்டி ஆடியோ பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.அவர் மீது சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் பல பெண்கள் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. தமிழ்நாடு முதல்வரையும் அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து அவரை மதுரையில் நேற்று காலை போலீசார் கைது செய்து, புதுச்சேரி குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






