புகையிலை பொருட்களை பதுக்கிய பெண் கைது;36 கிலோ பறிமுதல்

சேந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவக்குறிச்சி கருப்பன் கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி நபரை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பூசத்துரை என்பவரின் மனைவியான மகேஸ்வரி(45) என்பவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 36 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
What's Your Reaction?






