செல்போனில் ஆபாச படம் காட்டி 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாயின் கள்ளக்காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

May 2, 2024 - 21:14
 0  11
செல்போனில் ஆபாச படம் காட்டி 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாயின் கள்ளக்காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

சென்னை மதுரவாயல் துண்டலம், அண்ணாநகரை சேர்ந்தவர் ராணி (32), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 12 வயது மகள் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ராணி ஐயப்பன்தாங்கலில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கும் மினி வேனில் பூண்டு, புளி வியாபாரம் செய்யும் சதீஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இது ராணியின் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து ஏற்பட்ட தகராறில் ராணி கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சதீசுடன் தனியாக வசித்து வருகிறார். சிறுமி தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தந்தை வீட்டு வேலை செய்ய கூறி திட்டியதால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். ராணி வீட்டிற்கு சதீஷ் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதேநேரம் ராணி வீட்டில் டிவி இல்லாததால் அவரது 12 வயது மகளுக்கு சதீஷ் செல்போனில் அவ்வப்போது படம் காட்டுவதுபோல் செல்போனில் ஆபாச படங்களை காட்டி சிறுமியின் உணர்வுகளை தூண்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதற்கிடையே சிறுமி படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியபோது சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. உடனே சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர்கள் பரிந்துரைப்படி கடந்த 29ம் தேதி ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி என்பதால் இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தேவிகா பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது தனது தாயின் கள்ளக்காதலன் சதீஷ் செல்போனில் ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார்.அதன்படி போலீசார் சதீஷ் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே பூத்தார் கிராமத்தை சேர்ந்த சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். பிறகு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow