அரசு பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்டுச்சென்ற இரண்டு லேப்டாப்புகளை காவல் ஆணையாளர் அவர்களிடம் ஒப்படைத்தார்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, சாமிசெட்டிப்பட்டி கிரமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சேகர் என்பவர் அரசு பேருந்தில் திருச்செங்கோட்டில் இருந்து சேலத்திற்கு வரும்போது பின்பக்க சீட்டில் பையுடன் ACER மற்றும் DELL ஆகிய இரண்டு லேப்டாப்புகளை பயணி யாரோ தவற விட்டதை அறிந்து அவற்றை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இன்று 08.06.2024 ம் தேதி காலை லேப்டாப்புகளை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் ஒப்படைத்தார்.இவரின் நேர்மையை பாராட்டும் விதமாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
What's Your Reaction?