தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தல்
கோத்தகிரியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன், கோத்தகிரி எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் சிறப்பு எஸ்.ஐ., விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், கோத்தகிரி பஸ் நிலையம், ராம்சந்த் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், 'கடைகளில் குட்கா பொருட்கள் இருப்பு இல்லை; விற்பனையும் செய்யவில்லை,' என, உறுதி செய்யப்பட்டது.இருப்பினும், 'கடை உரிமையாளர்களுக்கு இவ்வகை பொருட்களை விற்பனை செய்ய கூடாது,' என, அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.
What's Your Reaction?