முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை; காவல் நிலையத்தில் 3 பேர் சரண்

May 13, 2024 - 15:43
 0  6
முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை; காவல் நிலையத்தில் 3 பேர் சரண்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். 22 வயதான இவர், தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தார். 6 மாதங்களுக்கு முன், உதயகுமார் தான் வசிக்கும் பகுதிக்கு வெளிநபர்கள் வந்ததால் அவர்களை மிரட்டும் தொனியில் பேசி, இது எங்க ஏரியா... உள்ளே வராதீங்க என விரட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் நரேஷ் என்பவர் அங்கு வந்தபோது உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதுடன், அடித்ததால் முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், தனது நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சாந்தகுமார் ஆகியோரிடத்தில் உதயகுமார் தாக்கியது குறித்து கூறியுள்ளார். உடனே அனைவரும் திட்டம் தீட்டி சிட்லபாக்கம் சேதுநாராயணன் சாலையில், தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த கும்பல் உதயகுமாரை சரமாரியாக வெட்டியது. இதனை கண்ட அவரது காதலி அலறியடித்து ஓடினார். கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow