கள்ளத்தனமாக மது பாட்டில்களை கடத்தி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமனஅள்ளியில் பாலக்கோடு காவல்துறையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணிகண்டன் என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.கையும் களவுமாக பிடித்த பாலக்கோடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?