நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

Apr 27, 2024 - 22:27
 0  9
நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 29). இவர் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.திருமணமாகி 1 மனைவி மற்றும் 1 குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அருள்முருகன் விளாங்குடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அருள்முருகனை ஓட ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டியது.அருள் முருகனின் கையும் துண்டிக்கப்பட்டு, முகத்தில் 20க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு முகம் சிதைந்தது. சம்பவ இடத்திலேயே அருள்முருகன் இறந்ததையடுத்து, கூடல்புதூர் போலீசார், அருள்முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை விரகனூர் பகுதியில் கல்மேடு பகுதியை சேர்ந்த அருள் முருகனின் உறவினர் நவநீதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன் அருள்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow