பிரபல ரவுடி கொலை வழக்கில் 3 பேர் சரண்;3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சைதாப்பேட்டையில் ரவுடி கவுதம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் தேனாம்பேட்டை போலீசில் சரணடைந்தனர்.கொலை செய்த ஒரு மணி நேரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பிரதீப், சுரேஷ், ராஜாபாய் ஆகியோர் சரணடைந்தனர். கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜ்கிரண், சுகுமார், மணி ஆகியோரை சைதாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






