ஆடு திருடிய இருவர் கைது

Aug 10, 2024 - 08:22
 0  4
ஆடு திருடிய இருவர் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே கோடுவெளி பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இந்நிலையில், இவர் வழக்கம்போல் தனது ஆடுகளை நேற்றுமுன்தினம் மேய்ச்சலுக்காக ஊருக்கு வெளிபுறம் பகுதியில் உள்ள வயல் வெளிக்கு அழைத்து சென்று சாலையோரத்தில் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் அந்த வழியாக ஆட்டோவில் வந்த 2 நபர்கள் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் ஆட்டோவில் ஏற்றினார். அப்போது இதையறிந்த சரண்ராஜ் பார்த்து சத்தம் போட்டதால் ஆட்டோவில் ஆட்டை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றபோது பொதுமக்கள் மடக்கி பிடித்து வெங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், சோழவரம் அடுத்த அலமாதி பகுதியைச் சேர்ந்த வினோத்(21), விஜய்(19) என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ஆட்டையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow