வேலியே பயிரை மேய்ந்த கதை; ரூ.37 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் செக்யூரிட்டி ஓட்டம்

May 14, 2024 - 18:23
 0  10
வேலியே பயிரை மேய்ந்த கதை; ரூ.37 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் செக்யூரிட்டி ஓட்டம்

வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் ஏற்றப்பட்ட நிலையில், இறுதியாக 5 பணப்பைகளுடன் ஊர்ப்பாக்கம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் ஏற்றச் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் ஏற்ற சென்ற வங்கி ஊழியர்கள், வேனில் இருந்த ரூ.37.71 லட்சம் மதிப்பிலான ஐந்து பணப் பைகள் மற்றும் செக்யூரிட்டி ஞானசேகரன் காணாமல் போனதை அறிந்து வங்கி மேலாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அரவிந்தன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கொட்டிவாக்கத்தில் உள்ள செக்யூரிட்டி ஞானசேகரன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், திருடிய பணத்துடன் செக்யூரிட்டி ஞானசேகரன் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியார் விடுதியில் சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுங்கியிருந்த ஞானசேகரனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 37.71 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow