முறைகேடாக இயங்கிய ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் காஞ்சனா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மற்றும் அலுவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை பகுதியில் இயங்கிய ஆம்னி பஸ்களில் இன்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். இதில் வரி செலுத்தாமை, செல்போன் பேசியவாறு பஸ் ஒட்டியது, பக்கவாட்டு விவரம் மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 31 பஸ்களுக்கு ரூ.57,500 அபராதம் விதித்தனர்.
What's Your Reaction?