நேர்முகத் தேர்வுக்கு சென்ற இளைஞர் மாயம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கரையம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னச்சாமி (30) என்பவர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி திருப்பூரில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடி வருகிறார்கள்.
What's Your Reaction?