வத்திராயிருப்பு பகுதியில் டிரைவர் கண்டக்டர் தாக்குதல்
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்சில் பெரியகருப்பன் என்பவர் ஏறி படியில் நின்று கொண்டு இடையூறு செய்ததை கண்டக்டர் ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். இதனையடுத்து, முத்துக்குமார், பெரியகருப்பன், சிவா உள்ளிட்ட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
What's Your Reaction?