மகன் மாயம். தந்தை புகார்.

Sep 9, 2024 - 06:20
 0  2
1 / 1

1.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மகனை காணவில்லை என்று தந்தை புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வி. பி. செல்வி மஹால் ரோடு டிபி ரோடு பகுதியில் வசிக்கும் சின்னமுத்துவின் மகன் முத்துக்குமார்( 29) என்பவர் திருமணமானவர். இவருக்கு பெண் குழந்தை உண்டு. இவர் விருதுநகரில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் வேலை விஷயமாக சென்னை சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow