அரியலூர் அருகே வெடிகள் பறிமுதல்
திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐயாறப்பன். இவர் வெடிக்கடை மற்றும் தயாரிப்பு ஆலை அமைத்து உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு உரிமம் புதுப்பிக்காமல் வெடி தயாரிப்பதாக திருமானூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் ஆய்வு செய்ததில், அனுமதியின்றி வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து குடோனில் பதுக்கி வைத்திருந்த வெடிகளை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?